இல்லங்கள் தோறும் மெய்ப்பொருளியல் கூடல்
நோக்கம்
நமது இறையியலானது, இயற்கையை முதன்மையாகவும், மையமாகவும் கொண்டு, மனித உறவுகளின் ஊடே இயங்கும் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மனிதர் அல்லாத பிற உயிர்களிடத்தும் உள்ள உணர்வுகளை மதித்து வாழும் வகையில் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வெற்று நம்பிக்கைகளும், சடங்குகளும், தமிழர் இறையியலில் இல்லை. நமது இறையியலின் வாயிலாக மனிதனுக்குக் கிடைக்கக்கூடியது மெய்ப்பொருள் எனும் அறிவின் முழுமை. அதனை அடைய நம் மண்ணில் ஞானியர் பலர் தோன்றியிருக்கிறார்கள், தமது அறிவை ஆவணப்படுத்திச் சென்றிருக்கிறார்கள். ஆனால் கெடுபேறாக நாம் அவற்றைப் பயன்படுத்தாமல் பரணில் பதுக்கி வைத்திருக்கிறோம். அவற்றை பழைமை எனும் பையில் போட்டு அடைத்து வைக்காமல், நவீன வாழ்வின் எதார்த்தத்தோடு பொருத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே எமது நோக்கம்!
திட்டம்
பல தலைமுறைகளாக அள்ளி எடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் அறியாமை எனும் கசடை ஓரிரவில் நீக்க முடியாது. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நமது மெய்ப்பொருளியல் கோட்பாடுகளை எளிதில் கடத்த முடியும். ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், வீட்டிலும் மெய்ப்பொருளியல் கூடல் என்பதே நமது திட்டம். இதனைப் பற்றி மேலும் அறிய, தளத்தில் இணையவும்!