மெய்ப்பொருளியல் கல்வி - செயல்திட்டம் - மெய்ப்பொருள் காண்பது எப்படி?
மெய்ப்பொருள் கல்வி என்பது, ஒரு நூல் அல்லது பாடத்தை கூடுதலாக படிக்க வைப்பதன் மூலம் சாத்தியமாகக்கூடியது அல்ல.
அது ஒரு தலைமுறையிடம் இருந்து இன்னொரு தலைமுறைக்கும்(செங்குத்தாகவும்), ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதரிடமுமாக (கிடைமட்டமாகவும்) இயங்கிப் பரவக் கூடியது. (காண படம்).
இதனை செயல்படுத்தும் திட்டம், குடும்பங்களில் மெய்ப்பொருள் குறித்து குழந்தைகளோடு பேசுவதற்கும், உரையாடுவதற்கும் நேரமும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வதில் தொடங்குகிறது.
திருக்குறளை மட்டும் வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு நாம் செயல்பட்டாலே, நம்மை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த தலைமுறை சற்றே தெளிவாகிவிடும்.
தாய்மொழிக் கல்வி, மிக நிச்சயமாக வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதனை தற்போதிருக்கும் கல்வித்திட்டத்தில் திறம்பட செயல்படுத்த முடியாது.
தாய்மொழியின் அருமை, அதன் பழமையில் இல்லை, மாறாக, அதன் பயன்பாட்டில் இருக்கிறது என்பதனை முதலில் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.
[இந்தக் கட்டுரையின் முழுமை விரைவில்...]
Comentários